04th July 2024 13:32:56 Hours
2024 ஜூன் 16 முதல் 26 வரை சீஷெல்ஸில் நடைபெற்ற சீஷெல்ஸ் சுதந்திர தின குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் குறிப்பிடத்தக்க தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் பீஎஸ்பீஎஸ் பெர்னாண்டோ அவர்கள் 67 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டி முழுவதும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். 75 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் சாஜன் கேஜிசீ பத்மசிறி வெள்ளிப் பதக்கத்தை சுவிகரித்துக்கொண்டார். இந்த வெற்றி சர்வதேச அரங்கில் இராணுவத்தின் வலுவான செயல்திறன் மற்றும் போட்டி மனப்பான்மையை மேலும் எடுத்துக்காட்டுகின்றது.