12th December 2024 11:56:36 Hours
சிலோன் முன்னாள் படைவீரர் டி20 கிரிக்கெட் போட்டி 2024 பனாகொடை இராணுவ முகாம் வளாக கிரிக்கெட் மைதானத்தில் 08 டிசம்பர் 2024 அன்று நிறைவடைந்தது.
இரண்டு பிரிவுகளில் எட்டு அணிகளுக்கு எதிராகப் போட்டியிட்ட இராணுவ முன்னாள் வீரர்கள், மெர்கன்டைல் மாஸ்டர்ஸ், டாக்டர்ஸ் மாஸ்டர்ஸ் மற்றும் மைட்டி ஸ்டாலியன் ஆகிய அணிகளை வெற்றி கொண்டு சாம்பியன்சிப்பை பெற்றுகொண்டனர். இறுதிப் போட்டியில் கொழும்பு மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டம் எடுத்த நிலையில், இராணுவ முன்னாள் வீரர்கள் 17.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றனர்.
அதிகாரவாணையற்ற அதிகாரி I எஸ்எஸ் ஓபினமுனி அவர்கள் தனது சிறப்பான ஆட்டத்திற்காக 129 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதற்காக 'போட்டியின் ஆட்ட நாயகனாக' தெரிவானார். பணிநிலை சாஜன் பீஎன் களுஆராச்சி 102 ஓட்டங்களுடன் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவுசெய்யப்பட்டார்.