09th October 2024 12:12:03 Hours
இலங்கை விமான படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கோல்ப் போட்டியான டி ஈகிள்ஸ் மொன்சூன் கிண்ணப் போட்டி, 2024 செப்டெம்பர் 28 மற்றும் 29 திகதிகளில் திருகோணமலை ஈகிள் கோல்ப் மைதானத்தில் நடைப்பெற்றது.
இராணுவ கோல்ப் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, கேணல் ஈடபிள்யூஆர்எஸ்பி எஹலபொல யூஎஸ்பீ யூஎஸ்ஏசீஜீஎஸ்சீ, கேணல் ஏஎச்ஆர் ஹசந்த ஆர்எஸ்பீ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஏஎன் திஸ்ஸ குமார ஆர்எஸ்பீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
65 போட்டியாளர்களுக்கிடையில் இடம்பெற்ற “நெரிஸ்ட் டு தி பின்” போட்டியில் இலங்கை கஜபா படையணியின் கேணல் ஈடபிள்யூஆர்எஸ்பி எஹலபொல யூஎஸ்பீ யூஎஸ்ஏசீஜீஎஸ்சீ அவர்கள் வெற்றி பெற்றார். அத்துடன் இப்போட்டியில் விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஏஎன் திஸ்ஸ குமார ஆர்எஸ்பீ அவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.