Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2023 22:47:36 Hours

2023 படையலகுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யாழில்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 523 வது காலாட் பிரிகேடின் ஏற்பாட்டில் படையலகுகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி யாழ். அல்லரை 7 வது விஜயபாகு காலாட் படையணி கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 22) இடம்பெற்றது.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப்போட்டி நடைபெற்றது. 12 கிரிக்கட் அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் 10 வது விஜயபாகு காலாட் படையணியின் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டியில் 522 வது காலாட் பிரிகேட் கிரிக்கெட் அணியை வீழ்த்தி சாம்பியனாகியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.

523 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்பிஎல் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, 11 வது களப் பொறியியல் படையணி கட்டளை அதிகாரி மற்றும் 7 வது விஜயபாகு காலாட்படையணி கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வைக் கண்டுகளித்தனர்.