Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2024 20:08:48 Hours

2023 கார் மற்றும் ஓட்டுனர் பந்தய தேசிய சாம்பியன்ஷிபில் இராணுவ வீரர்கள் கௌரவிப்பு

நிப்பொன் பெயிண்ட் - கார் மற்றும் பந்தய தேசிய சாம்பியன்ஷிப் விருது வழங்கும் விழா 2023 இலங்கை மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பின், இலங்கை மோட்டார் சைக்கிள் விளையாட்டு சம்மேளனம் மற்றும் இலங்கை பந்தய ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கம் ஆகியவை இணைந்து சனிக்கிழமை (ஜனவரி 27 ) இலங்கை கவச வாகன படையணியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் , கடந்த வருடத்தில் சிறப்பாக செயற்பட்ட 04 இராணுவ வீரர்கள் 05 தேசிய சம்பியன்களாக கௌரவிக்கப்பட்டனர். இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இராணுவ மற்றும் மோட்டார் விளையாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டார்.

தனிப்பட்ட திறன்கள் பின்வருமாறு:

இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.ஏ.குமாரசிங்க

 எம்எக்‌ஸ் - ஸ்டாண்டர்ட் 250 சீசீ தேசிய சாம்பியன்

 எம்எக்‌ஸ் - ரேசிங் 250 சீசீ தேசிய சாம்பியன்

 2023 ஆம் ஆண்டின் சிறந்த ஓட்டுநருக்கான விருதுகள்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கோப்ரல் பிஐ மதுரங்க

 எஸ்எம் - சூப்பர் மோட்டார்ட் 250/450 சீசீ திறந்த தேசிய சாம்பியன்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் கேடிஆர் ஜயஷான்

 எம்எக்ஸ்- ஸ்டாண்டர்ட் 125 சீசீ தேசிய சாம்பியன்

இலங்கை பீரங்கிப் படையணியின் சிப்பாய் டிகேஆர்என்எஸ் குமார

 எம்எஸ்- ரேசிங் 125 சீசீ தேசிய சாம்பியன்