Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2023 22:52:00 Hours

2023 வெசாக் பண்டிகைக்கான ஏற்பாடுகளை மேற்குத் தளபதி ஆய்வு

<மேற்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் எதிர்வரும் அரச வெசாக் பண்டிகைக்கு இராணுவத்தின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக, சிலாபம், கபல்லேவவில் உள்ள 'ஸ்ரீ ரத்தனசிறி நஹிமி மஹாபிரிவெனவிற்கு விஜயம் செய்து, இராணுவத்தின் வெசாக் ஏற்பாடுகளை பார்வையிட்டார். இத்திட்டம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது.

<ஜனாதிபதி செயலகம், புத்தசாசன அமைச்சு மற்றும் புத்தளம் மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அரச வெசாக் பண்டிகை -2023 ஆனது 2023 மே 03 முதல் 09 வரை மேற்படி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

<இவ் விஜயத்தின் போது, மேற்குத் தளபதி, இராணுவத் தளபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பொருத்தமான கடமைகள் மற்றும் பல்வேறு ஒதுக்கப்பட்ட பணிகள் தொடர்பாக பொறுப்பான அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

<மேற்கு தளபதி ஸ்ரீ ரத்தனசிறி நஹிமி மஹாபிரிவேனாவின் பிரதம தேரரை சந்தித்து அரச வெசாக் நிகழ்வை சுமூகமாக நடத்துவது தொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

<மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாக மற்றும் வழங்கல், 143 வது காலாட் பிரிகேட் தளபதி, 16 கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் உடனிருந்தனர்.