15th June 2021 19:17:04 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய, இலங்கை பொறியியலாளர் படையணியின் இலங்கை இராணுவ மனிதாபிமான மிதிவெடி அகற்றும் பரிவினர், 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்த அடையாளம் காணப்பட்ட மற்றும் அபாயகரமான பகுதிகளில் உள்ள மதி வெடிகள் அகற்றும் தேசிய இலக்கை திறம்பட நிறைவேற்றுவதற்காக விரைவாக செயல்பட்டு வருகின்றனர்.
நாட்டின் முன்னணி மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரே அரசு நிறுவனமான SLADHU, இன்றுவரை மொத்த வெடிபொருள் மற்றும் மிதிவெடி பிரதேசமான 1316.65 சதுர கி.மீ பரப்பரவில் 886.19 சதுர கி.மீ. வடக்கில் அபாயகரமான மிதிவெடிகளை அகற்றியுள்ளது.
ஏனைய அனைத்து சர்வதேச மற்றும் உள் நாட்டின் அரச சார்பற்ற நிறுவனங்கள் (INGOs) இதுவரை 417.12 சதுர கி.மீ. வரையான மிதிவெடிகளை அகற்றியுள்ளன. அதன்படி, தேசிய இலக்கை பூர்த்திசெய்து இலங்கையை மிதிவெடி இல்லாத நாடாக மாற்றுவதற்கு மீதமுள்ள 13.34 சதுர கி.மீ பரப்பளவிலான மிதிவெடிகள் இன்னும் அகற்றப்படவுள்ளது.
SLADHU நிறுனத்தினால் இதுவரை 99,727 மிதி வெடிகள், 223 கண்ணிவெடிகள் மற்றும் 42,919 வெடிக்காத வெடிபொருட்கள் இராணுவ மிதிவெடி அகற்றும் பணிகளின் போது மீட்கப்பட்டுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் மிதிவெடி அகற்றும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக தலைமை கள பொறியியலாளரும் இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர அவர்கள் , மிதிவெடி அகற்றும் பகுதி தளபதிகளுடன் இணைந்து அண்மையில் பூ ஓயா கள பொறியியலாளர் படையணியின் தலைமையகத்தில் நடந்த ஒரு மாநாட்டின் போது மதிப்பாய்வு செய்தார். குறித்த மதிப்பாய்வு மாநாடானது தலைமை கள பொறியியலாளர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தளபதிகள் உள்ளடங்கிய குழுவினர் 2021 ஜூன் 12-13 ஆம் திகதிகளில் வடக்கில் உள்ள மிதிவெடி அகற்றும் பகுதிகளை பார்வையிடுவதற்கு முன்னதாக . இடம்பெற்றது.
அவர்கள் கள பொறியியலாளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் துமிடு ஜசிங்க மற்றும் பிராந்திய மிதிவெடி அகற்றும் நடவடிக்கை அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆண்டாம்குளம் மிதிவெடி அகற்றும் பகுதிகள் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் ஆகிய இடங்களை பார்வையிட்டனர். அதன்பிறகு, முஹமாலை மற்றும் பலாலி பகுதிகளில் நடந்துகொண்டிருக்கும் மனிதாபிமான மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மற்றும் அப்பிரதேசங்களை பார்வையிட்ட தலைமை கள பொறியியலாளர் அவர்களின் மதிவெடி அகற்றும் பணிகளின் மேலதிக செயற்பாடு தொடர்பாகவும் பரிந்துரைசெய்தார்.
இந்த விஜயத்தின் போது, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை மிதிவெடியற்ற சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தும் முகமாக, இராணுவத் தளபதியின் ஆலோசனையின் பேரில், தற்போதுள்ள வரையறுக்கும் திறன்களை விரைவுபடுத்துவதன் மூலம் தேசிய இலக்கை அடைவதன் முக்கியத்துவத்தை தலைமை கள பொறியியலாளர் எடுத்துரைத்ததோடு, நடந்துகொண்டிருக்கும் மிதிவெடி அகற்றும் பணிகளுடன் தொடர்புடைய ஏனைய நடைமுறை அம்சங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.