Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2021 டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு பணிநிலை சார்ஜென்ட் ஜே.ஏ.எம்.பி ஜயகொடி தகுதி

ஆசிய மற்றும் ஓசியானியா பரா ஒலிம்பிக் ரெகட்டா தகுதி போட்டி வெள்ளிக்கிழமை (7) நடைபெற்றது. பிஆர் 1 ஆண்கள் ஒற்றையர் படகோட்டும் போட்டியில் இலங்கையின் பரா தடகள வீரர் சிறப்பு படையின் பணிநிலை சார்ஜென்ட் ஜே.எம்.பி ஜயகொடி முதலிடம் பெற்று வரலாற்றை உருவாக்கினார்.

இந்த நிகழ்வில் பணிநிலை சார்ஜென்ட் ஜே.ஏ.எம்.பி ஜயகோடி 11 நிமிடங்கள் 04.23 வினாடி திறன்களுடன் முதல் இடத்தைப் பிடித்து. டோக்கியோ 2021 பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார்.

பரா ஒலிம்பிக்கில் படகோட்டும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இலங்கையர் ஆவார். இலங்கை இராணுவ படகோட்டுதல் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங் இதற்கான முழு ஒத்துழைப்பினையும் வழங்கியிருந்தார்.

இந்த போட்டி தொடரில் இலங்கை குழுவில் மேஜர் ஏ.எம்.எம்.எம்.அலகியவன்ன (பயிற்சியாளர்), கப்டன் எம். பி. சி. எச். லியானகே (உதவி பயிற்சியாளர்), பணிநிலை சார்ஜென்ட் ஜே.ஏ.எம்.பி ஜயகோடி ஆகியோரபைங்கு கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா, உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.