இராணுவ படையணிகளுக்கு இடையிலான யூடோ போட்டியின் இறுதி சுற்றுகள் (30) ஆம் திகதி பனாகொட இராணுவ விளையாட்டு உள்ளரங்கில் இடம்பெற்றது.
இராணுவ யூடோ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் சாந்த தெஹிவத்தவின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் வருகை தந்து வெற்றீட்டிய வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணத்தை வழங்கினார்.
இப்போட்டிகள் இராணுவத்தின் 18 படையணிகளை உள்ளடக்கி 200 வீரர்களது பங்களிப்புடன் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இறுதி சுற்றுப் போட்டியில் 53 புள்ளிகளை பெற்று தேசிய பாதுகாப்பு படையணி முதலாவது இடத்தையும், 14 புள்ளிகளை பெற்று இலங்கை மின்சார இயந்திர படையணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
பயிலிளவ படையினர்களுக்கான போட்டியில் இராணுவ போர் கருவி படையணி முதலாவது இடத்தையும் சிங்கப் படையணி இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
Sports News | FASHION NEWS