Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th August 2022 13:38:19 Hours

2000 குடும்பங்களுக்கு இலவச உலர் உணவுப் பொருட்கள் வழங்கள்

நா-உயன ஆரண்ய செனசவின் தலைவர் வண.அகுலுகமுவ அரியநந்த தேரர் மற்றும் நா-உயன பௌத்த சங்கத்தின் குழு உறுப்பினர்களின் அனுசரணையுடன் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவு படையினர் ஓகஸ்ட் 20 ஆம் திகதி அம்பாறை பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் 2000 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கும் திட்டதினை ஒருங்கிணைத்தனர்.

24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்கள் 241 மற்றும் 242 பிரிகேட்களுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்தார். மேலும் தீகவாபிய விகாரை வளாகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் கலந்து கொண்டார்.

இதேவேளை, தீகவாபிய சிங்களப் பாடசாலை, தீகவாப்பிய பரிவார சைத்திய வளாகம் மற்றும் லாகுகல மாவட்ட செயலக மாநாட்டு மண்டபம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டதின் மூலம் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்துப் சமூகங்களின் வறிய குடும்பங்கள் பயன்பெற்றனர். வழங்கப்பட்ட உலர் உணவு பொருட்களில் சுமார் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்கப்பட்டன.

தீகவாபிய மற்றும் நீலகிரிய பிரதேசங்களின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 400 அடையாளம் காணப்பட்ட பாடசாலை மாணவர்கள் தலா ரூபா 5000/= பெறுமதியான பாடசாலை எழுதுபொருட்களை பெற்றுக்கொண்டனர். மேலும் வழங்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 மில்லியனைத் தாண்டியது.