09th July 2023 22:29:09 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 221 வது காலாட் பிரிகேடின் 20 வது கஜபா படையணி நன்கொடையாளர் ஒருவரின் அனுசரணையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 04) மகாசென்புர, பழைய மதவச்சி வித்யாலத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வை பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்தனர்.
படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் கம்பஹாவில் வசிக்கும் திரு டி புஷ்பகுமார வழங்கிய 3,20,000.00ம் ரூபாய் பொறுமதியான அத்தியாவசிய கற்றல் உபகரணங்களை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 80 மாணவர்களுக்கு வழங்கினர்.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ மற்றும் 221 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகே பீரிஸ் ஆர்எஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் நடைபெற்றது.
20 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூடபிள்யூஎன்சீ வடுகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் இந் நிகழ்ச்சி நடைபெற்றதுடன், திரு டி புஷ்பகுமார, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பயனாளிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.