22nd October 2024 14:23:16 Hours
20 வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் 2024 ஒக்டோபர் 20 ம் திகதி மொனராகலை படல்கும்புரவிலுள்ள ஸ்ரீ சித்தார்த்த தர்ம பாடசாலைக்கு புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
121 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஜிஎம்என் செனவிரத்ன யூஎஸ்பீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் போது, ஹோப் போ லைப் ஒப் லங்கா தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன், 108 மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.