20th August 2024 18:58:29 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 121 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 20 வது இலங்கை சிங்க படையணி படையினர் வெல்லவாய ஹந்தபனகல மெத் சேவா அறக்கட்டளை இல்லத்தில் சிரமதான பணியை 17 ஆகஸ்ட் 2024 அன்று.முன்னெடுத்த்துடன் பொழுதுபோக்கு நிகழ்வையும் நடத்தினர்.
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சிறார்களுக்கான இரவு உணவு மற்றும் கலிப்சோ இசை குழுவினரின் பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும், பொரலஸ்கமுவவைச் சேர்ந்த நன்கொடையாளர்களின் ஆதரவுடன் விசேட தேவையுடைய 100 பெரியவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.