06th September 2024 18:47:45 Hours
இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 20 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 20 வது இலங்கை சிங்க படையணி படையினரால் தனமல்வில சித்செவன விஷேட தேவையுடை சிறுவர் மேம்பாட்டு நிலையத்தில் 2024 செப்டெம்பர் 04 அன்று சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. இந்த பணிக்கு சிறுவர் மேம்பாட்டு நிலைய அதிகாரிகள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.