18th December 2024 15:20:53 Hours
பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ரம்பேவ, துலானா ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் அரச மரமொன்று முறிந்து வீழ்ந்ததால், விகாரை வளாகத்தின் கட்டிடம் ஒன்றுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. ரம்பேவ பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் 17 டிசம்பர் 2024 அன்று விழுந்த மரத்தை அகற்றி அப்பகுதியை சுத்தப்படுத்தினர்.
இந்த திட்டம் 213 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.