Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th February 2024 13:53:36 Hours

2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் மதவச்சியில் தேவையுடைய குடும்பத்திற்கு உதவி

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21 வது காலாட் படைப்பிரிவின் படையினர் தமது நலன்புரித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இல. 54 ஹிரல்லுகம, படிக்கம, மதவச்சியில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு தற்போது அமெரிக்காவில் உள்ள திரு. ரத்ன ஹபங்கம அவர்களின் அனுசரணையில் புதிய வீட்டை நிர்மாணித்தனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களினால் புதிதாக கட்டப்பட்ட வீடு 2024 பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

மதவாச்சி பிரதேச செயலாளர் திருமதி எம்.சி. மளவியாராச்சி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 21 வது காலாட் படைப்பிரிவு மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இத்திட்டத்திற்கு வழங்கியது.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்ச பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.