19th February 2024 19:03:50 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் 221 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) கஜபா படையணியின் படையினர் திருகோணமலையில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வை பெப்ரவரி 13 ஆம் திகதி 2 வது (தொ) கஜபா படையணியில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட 2 வது (தொ) கஜபா படையணி கட்டளை அதிகாரியினால் 50 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 50 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இத்திட்டத்திற்கான நிதியுதவியை திரு.லெஸ்லி மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கினர்.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம். பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 221 வது காலாட் பிரிகேடின் தளபதி கேணல் கேஏஎஸ்ஜே கொடித்துவக்கு யூஎஸ்பீ ஆகியோர் இந்நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.