21st March 2025 18:37:14 Hours
221 வது காலாட் பிரிகேட் கட்டளையின் கீழ் இயங்கும் 2 வது (தொ) கஜபா படையணியின் படையினர் 2025 மார்ச் 20 அன்று திருகோணமலை மருத்துவமனை கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர்.
கடற்கரையை பாதுகாப்பது, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்து தூய்மையான சூழலை வழங்குவது மற்றும் பசுமையான எதிர்காலத்தை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாக காணப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.