30th August 2023 19:53:31 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது காலாட் பிரிகேட்டில் சேவையாற்றும் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் அனர்த முகாமைத்துவ தொடர்பான பயிற்சிகளை களனி ஆற்றங்கரையில் புதன்கிழமை (ஓகஸ்ட் 23) மேற்கொண்டனர்.
இதன்போது 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் அவசரகால நடவடிக்கைகள், விரைவான செயல்பாட்டு நடைமுறைகள், வெளியேற்றும் நுட்பங்கள், இடமாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்துதல், வெள்ள நிவாரணப் கடமைகள், போன்ற தத்துவார்த்த மற்றும் நடைமுறை அம்சங்கள் தொடர்பாக கற்றனர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடி பீஎஸ்சீ, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதல்களுக்கமைய 144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்வி கொடித்துவக்கு 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.