Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2023 09:38:45 Hours

2 வது (தொ) இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் விளையாட்டு வீராங்கனைக்கு பரிசுத் தொகை

2 வது (தொ) இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர்களின் தடகளத் திறன்களை மதிப்பீடு செய்து, மார்ச் 15 ஆம் திகதி, பனாகொடை 2 வது (தொ) இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரியின் அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து அவர்களின் திறமைகளைப் பாராட்டியது.

தெற்காசிய மரதன் ஓட்டம் - 2022ல் சிறந்து விளங்கிய லான்ஸ் கோப்ரல் எச்எம்பீ ஹேரத் (நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனை) மற்றும் இந்திய அரச போட்டி-2022ல் சிறப்பாக செயல்பட்ட சிப்பாய் பிஐஎன் ஜெயமன்ன (குறுகிய ஓட்டப்பந்தய வீராங்கனை) ஆகியோரை 2 வது (தொ) இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தலா 10,000/= ரூபா. ஊக்கத்தொகை பணமாக வழங்கப்பட்டது. இந்த ஊக்கத்தொகைக்கான நிதியுதவியை படையணியில் உள்ள அனைவரும் வழங்கியிருந்தனர்.