16th February 2023 20:05:26 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் 111 வது பிரிகேடின் கீழ் அமைந்துள்ள 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் செவ்வாய்கிழமை (பெப்ரவரி 14) பிற்பகல் கண்டி வடகொட, மஹாகந்த மலைப் பிரதேசத்தில் பரவிய காட்டுத் தீ அணைக்கப்பட்டது.
சுமார் 5 மணி நேரம் போராடி காட்டுத்தீ பரவுவதை தடுக்க அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 15 இராணுவ வீரர்கள் இணைந்து காட்டுத்தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.