27th June 2024 00:07:53 Hours
2024 ஜூன் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கொரியாவில் நடைபெற்ற 2வது ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பணி நிலை சார்ஜன் நதீஷா லேகம்கே மற்றும் கோப்ரல் சுமேத ரணசிங்க ஆகியோர் பங்குபற்றி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தினர்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் 2 (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணி நிலை சார்ஜன் நதீஷா லேகம்கே, 57.94 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுகொண்டார். இதேவேளை, 2 (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கோப்ரல் சுமேத ரணசிங்க 77.57 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தை சுவிகரித்துக் கொண்டார்.
பட அனுசரனை: சிலோன் அத்லடிக்