24th October 2023 23:15:13 Hours
கண்டியில் அமைந்துள்ள 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் தமது 67 வது ஆண்டு நிறைவினை ஒக்டோபர் 3 – 4 ஆம் திகதிகளில் கண்டியில் உள்ள அவர்களது படையணி வளாகத்தில் சமய அனுஷ்டானங்களுக்கும் இராணுவ சம்பிரதாயங்களுக்கும் முன்னுரிமை அளித்து கொண்டாடினர்.
2 வது (தொ) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மேஜர் டப்ளியு எஸ் பீ பெரேரா அனைத்து ஏற்பாடுகளையும் நெருக்கமாக மேற்பார்வையிட்டனர்.
'பிரித்' பாராயணம், போர்வீரர்களின் நினைவேந்தல், அன்னதானம் வழங்குதல், கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இசை நிகழ்வுகள் ஆண்டு விழாவிற்கு முக்கியத்துவம் சேர்த்தன.
இராணுவ மரபுகளுக்கு இணங்க 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் ஆண்டுவிழா நாளில் (ஒக்டோபர் 4) தங்கள் கட்டளை அதிகாரிக்கு கெளரவ அணிவகுப்பு மரியாதையை வழங்கினர். வழக்கமான அனைத்து நிலையினருடனான மதிய உணவு விருந்துபசாரத்துடன் ஆண்டு விழா நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.