07th November 2023 20:05:38 Hours
பூநகரி ஜெயபுரம் பகுதியில் சேவையாற்றும் 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 33 வது ஆண்டு நிறைவை முகாம் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) கொண்டாடினர்.
ஆண்டு நிறைவு நாளில், 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் நிகழ்வின் நினைவாக வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்தார்.
பின்னர் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வு நிறைவுற்றது. 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் பங்கேற்றனர்.