09th October 2023 22:02:57 Hours
1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டு செவ்வாய்கிழமை (ஒக்டோபர் 10) 74 வயதை பூர்த்தி செய்யும் நிலையில், அதற்கு இணையான பழம்பெரும் வீரரான பிரிகேடியர் அந்தோனி பயஸ் ரத்னராஜா டேவிட் தனது 90 வயதைக் கடந்துள்ள அவர் ரசிக்கும்படியான ஒரு உற்சாகமான கதையைச் சொல்லியுள்ளார். அதே 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இராணுவத்தில் இணைந்து 74 ஆண்டுகள் நிறைவு செய்த பெருமையும் உண்டு.
பிரிகேடியர் அந்தோனி பயஸ் ரத்தினராஜா டேவிட் அவர்கள் இலங்கை இராணுவம் நிறுவப்பட்ட அந்த வரலாற்று நாளில் 1949 வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மூன்று லெப்டினன் கேணல்களுடன் முதல் 10 பயிலிளவல் அதிகாரிகளின் ஒருவராக பிரசுரிக்கப்பட்டமை மரியாதை, மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஒன்றாகும்.
பிரிகேடியர் அந்தோனி பயஸ் ரத்னராஜா டேவிட், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதி சிரேஷ்ட அதிகாரிகளில், உயிருடன் இருக்கும் ஒரே சிரேஷ்ட அதிகாரியாவர்.
யாழில் பிறந்து வளர்ந்த பிரிகேடியர் டேவிட் அவர்கள் புனித பெட்ரிக் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்க் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளதோடு 1949 ஆம் ஆண்டில், ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை நிரந்தர படையணியில் இணைந்துக்கொண்டுள்ளார். 1950 முதல் 1951 வரையான ஐக்கிய இராச்சியத்தின் ஆல்டர்ஷாட் மோன்ஸ் அதிகாரிகள் கல்வியற் கல்லூரியில் அவரது அடிப்படை பயிற்சியானது புகழ்பெற்ற சான்ட்ஹர்ஸ்ட் ரோயல் மிலிட்டரி கல்வியற் கல்லூரியில் நுழைவதற்கு அவரைத் தகுதிப்படுத்தியது.
தனது பயிற்சியை முடித்த பிரிகேடியர் டேவிட் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் பணியமர்த்தப்பட்டார். அவரது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், அவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இதில் குழு தளபதி, இராணுவ தலைமையகத்தில் பணி நிலை கெப்டன் "ஏ" மற்றும் 1வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி என பல பதவிகளை வகித்துள்ளார்.
லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் கண்காணிப்பாளராக பணியாற்றுவதன் மூலம் உலகளாவிய அமைதி காக்கும் முயற்சிகளுக்கு அவர் பங்களித்ததால், அவரது அர்ப்பணிப்பு இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாலும் நீட்டிக்கப்பட்டது. அவர் தனது இராணுவக் கல்வியை ஐநா மற்றும் இந்தியாவில் பட்டபடிப்புகளுடன் தொடர்ந்த அவர் தொடர்ந்து தனது திறமைகளை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார்.
பிரிகேடியர் டேவிட் அவர்கள் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று, 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் முதலாவது உள்ளக நடவடிக்கையான "ஒப்பரேஷன் மோன்டி"யில் அவர் ஈடுபட்டமையாகும். இந்த நடவடிக்கையானது ரோயல் இலங்கை கடற்படையின் கடலோர ரோந்து மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வடமேற்கு கடற்கரைக்கு கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்ட சட்டவிரோத தென்னிந்திய குடியேற்றவாசிகளின் வருகையை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டது. 1963 இல் விசேட அதிரடி படையணியின் எதிர்ப்பு சட்டவிரோத குடியேற்றம் என மறுபெயரிடப்பட்டது, இது 1981 வரை தொடர்ந்தது. பிரிகேடியர் டேவிட் அவர்கள் முன்னோடி முயற்சிகள் இந்த நடவடிக்கைக்கு அடித்தளம் அமைத்தன.
1953 ஹர்த்தால் மற்றும் 1956 கல் ஓயா பள்ளத்தாக்கு கலவரத்தின் போது மாகாண அவசரகால சட்டங்களின் கீழ் சட்டம் ஒழுங்கை பேணுவதில் பிரிகேடியர் டேவிட் தனது பங்கிற்கு மேலதிகமாக ‘ஒப்பரேஷன் மோன்டி’யில் முக்கிய பங்கு வகித்தார்.
இன்று, பிரிகேடியர் (ஓய்வு) டேவிட் கனடாவின் ஒன்டாரியோவில் ஒரு தகுதியான ஓய்வை பெறுகிறார், அதே நேரத்தில் படையணியின் செயற்பாடுகளில் மிகுந்த ஆர்வத்தையும் வைத்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 74 வருடங்களை நாம் கொண்டாடும் இவ்வேளையில், இலங்கை இராணுவத்தை வடிவமைத்துள்ள மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்களுக்குள் வாழும் பிரிகேடியர் அந்தோனி பயஸ் ரத்னராஜா டேவிட்டின் நீடித்த மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்புக்கு நாம் தலைவணங்குகிறோம். அவரது முன்மாதிரியான தலைமைத்துவமும், தளராத அர்ப்பணிப்பும் இலங்கை இராணுவத்தின் பாரம்பரியத்தை செழுமைப்படுத்தியது மட்டுமன்றி, வருங்கால சந்ததியினரையும் ஊக்கப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.