Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th October 2021 17:04:13 Hours

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி ஆரம்பமான இலங்கை இராணுவம் தனது 72 வது ஆண்டு நிறைவை வெகு விமர்சையாக கொண்டாடுகிறது

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி ஆரம்பமான இலங்கை இராணுவம் தனது 72 வது ஆண்டு நிறைவை வெகு விமர்சையாக கொண்டாடுகிறது. இந்த சிறப்பான ஆண்டு நிறைவை கொண்டாடும் தருணத்தில் தற்போதைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக பணியாற்றும் இராணுவ தளபதியால் இந்த வாழ்த்துச் செய்தி மிகவும் அபிமானத்துடன் வெளியிடப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றில் அதன் சுயாதீனத் தன்மை எதிராக பல குழுக்கள் எழுந்தபோதும் அந்த அந்த சவால்களுக்கு முகம் கொடுத்து அவற்றை முறியடிக்க இலங்கையர்கள் முன் நின்றனர். இலங்கை இராணுவம் 72 வருட காலப்பகுதியில் தாய் நாட்டிற்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்த எல்டிடிஈ பயங்கரவாதம் அடிப்படைவாத அமைப்பின் அச்சுறுத்தலில் இருந்தும் அரச எதிர்ப்பு செயற்பாடுகளையும் முறியடிக்கும் ஒரு அமைப்பாக வரலாற்றில் இடம் பிடிக்கிறது. தாய் நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான போராட்டங்களில் ஈடுபட்ட அபிமான மிக்க அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பலரது பெறுமதிமிக்க உயிர்கள் தாய்நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி வீரமிக்க தாய்நாட்டின் வீரர்களை நன்றிக்கடனோடு 72வது ஆண்டு நிறைவு விழாவில் நினைவு கூறுவதோடு, அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்திக்கிறேன். அதேபோல் தாய் நாட்டிற்காக போரிட்டபோது அங்கவீனமுற்ற அதிகாரிகள் சிப்பாய்கள் சிவில் ஊழியர்களையும் கௌரவத்தோடு நினைவு கூறுகிறேன். அவர்களில் தற்போது சிகிச்சை பெற்று வருவோருக்கு விரைவில் முழுமையான சுகம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன். அதேபோல் கடந்துசென்ற 72 வருட காலத்தில் இருந்து தற்கால நிலைமை வரை இலங்கை இராணுவத்திற்கு தலைமைத்துவம் வழங்கிய தளபதிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வழங்கிய பெறுமதியான பங்களிப்பையும் நினைவு கூறுகிறேன்.

30 வருட காலங்களாக தாய்நாட்டிற்கு நெருக்கடியை கொடுத்து வந்த எல்டிடிஈ பயங்கரவாதம் 2009 ஆம் ஆண்டில் மனிதாபிமான நடவடிக்கையின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட போது அதற்கு கம்பீரமான தலைமைத்துவத்தை வழங்கிய அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு கோட்டாபய ராஜபக்ச அவர்களையும் தற்போதைய இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான கௌரவர் மஹிந்த ராஜபக்ச அவர்களையும் அப்போதைய மனிதாபிமான நடவடிக்கைகளின் போது படைப்பிரிவு தளபதிகளில் ஒருவராகவும் தற்போதைய பாதுகாப்பு செயலாளராகவும் இருக்கும் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்களையும் கௌரவத்துடன் நினைவு கூறுகிறேன்.

ஒரு நாட்டிற்கு வருகின்ற நெருக்கடிகள் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தலாக மட்டுமே அமைந்திருக்காது என்பதை உணர்ந்தால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பு உதவி செய்ய முடியும். இராணுவ அதிகாரிகள் சிப்பாய்கள் இராணுவ முகாம்கள் என்பவற்றை தற்காலத்திற்கு உகந்த வகையில் மாற்றி அமைத்துக் கொள்வதற்கான பயிற்சிகள் பலவற்றை கடந்த காலங்களில் நிறைவு செய்துகொள்ள முடிந்தது. தேசிய அனர்த்தம் ஒன்றின்போது மக்களின் பாதுகாப்புக்காக முன்வர வேண்டியது ஒரு நாட்டு இராணுவத்தின் முக்கிய கடமையாகும். தேசிய அனர்த்தங்களின் போது தாய் நாட்டின் மக்களை பாதுகாக்க முன்வரும் நிறுவன கட்டமைப்பாக இலங்கை இராணுவம் நாடு இடர்பாடுகளை எதிர்கொண்ட சகல சந்தர்ப்பங்களிலும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. தனது கடமையை செய்யும் உயர்ந்த வகையில் நிறைவு செய்துள்ளது.

அக்காலத்தில் முழு நாடும் எதிர்கொண்டுள்ள கொவிட் 19 அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் சவால் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்து உள்ளார்கள். அந்தக் கடமையையும் மிக உயர்வான தரத்தில் நாம் செய்துவருவதை பெருமிதத்துடன் நினைவு கூறுகிறேன். நாட்டுக்குள் தொற்று நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை கண்டறிதல் என்பவற்றோடு 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக தடுப்பூசியை வழங்கும் நிறுவனமாக இலங்கை இராணுவம் மட்டுமே உள்ளது. அதேபோல் நடமாடும் தடுப்பூசி சேவை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் திருப்திகரமாக செயற்படுத்த முடிந்ததால் மகிழ்ச்சி கொள்கிறோம். அத்தோடு வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வைத்தியசாலைகளின் கொள்லளவை மிஞ்சிய நெருக்கடியான சந்தர்ப்பங்களின் போது அந்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்றே தினங்களில் சுமார் 25000 கட்டில்களை கொண்டதான இடைநிலை பராமரிப்பு நிலையங்களை முதன்முறையாக அறிமுகப்படுத்தி நாட்டிற்கும் நாட்டின் சுகாதார சேவை துறைக்கும் வலுவான பங்களிப்பை இராணுவம் வழங்கியது.

சுகாதார இடைவெளி காணப்பட்டாலும் மனித மேம்பாட்டுக்கான துறை சார் மூலோபாய அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்களிப்பு செய்ததையும் நினைவு கூறுகிறோம். குறிப்பாக 2020 தொடங்கும் 2025 வரையான காலத்தில் இராணுவத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட முன்னோக்கு மூலோபாய திட்டத்தின் கீழ் இராணுவத்தின் முன்னேற்றத்திற்கான பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். நாட்டில் காணப்படும் சுகாதாரத்தில் நிலைமைக்கு மத்தியில் ட்ரோன் படையணி ஒன்றை உருவாக்குதல் விவசாய மற்றும் கால்நடை படைப்பிரிவு ஒன்று ஆரம்பித்தல் சேவை படையினை நிறுவுதல் மேலதிக இடர் தவிர்ப்பு படைப்பிரிவு ஒன்று நிறுவியுள்ள அதேவேளை அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் சார்ந்த படைப்பிரிவு ஒன்று 58-வது படைப்பிரிவில் நிறுவியுள்ளமை நிறுவன கட்டமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள மூலோபாய மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது.

வெளிநாடுகளில் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்கு பயன்படும் யூனி பபல் வாகனத்தை தயாரித்து நாட்டிற்குள் பெருமளவான அன்னிய செலாவணியை சேமித்த பெருமையும் உண்டு. அதேபோல் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருந்தது லேண்ட்ரோவர் வாகனங்கள் பஜிரோ வாகனங்கள் லேண்ட் கிரஷர் மற்றும் மொண்டரோ ரக வாகனங்களை ஏல விற்பனை செய்வதற்கு மாறாக மேற்படி வாகனங்களை பழுது பார்த்து அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தி இராணுவ வாகன இருப்பை வலுவாக்கி கொள்வதற்கான முயற்சிகளும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. மோட்டார் வாகன திணைக்களத்தின் வாகன அனுமதி பத்திரங்களை அச்சிட்டு வினியோகிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்ட தன் மூலம் பெருந்தொகையான பணம் நாட்டிற்கு எஞ்சியமை குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல் அதிமேதகு ஜனாதிபதி அவர்களே நேரடியாக இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலை மைதானங்களை சீரமைத்தல் தேசத்தை கட்டியெழுப்புதல் விளையாட்டு மைதான பார்வை மண்டபங்களில் நிறுவுதல் பாடசாலை கட்டிடங்களை நிறுவுதல் கட்டிடங்களை திருத்தி அமைத்தல் வீதிகளை கட்டமைத்தல் மக்கள் சேவைக்கு உதவிகளை வழங்குதல் குளக்கட்டு புனரமைப்பு பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை நாட்டின் தேவை மற்றும் பொருளாதார அபிவிருத்தியை கருத்திற்கொண்டு படையினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் பல்வேறு வனப் பகுதிகளுக்குள் மனித நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்து எதிர்கால சந்ததிக்கு இயற்கை வளத்தை பாதுகாத்து கொடுப்பதற்காக படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை வனப்பகுதியை அளவு குன்றி வரும் காலப்பகுதியில் துரு மிதுறு நவரட்டக் திட்டத்தை ஆரம்பித்து நாடு முழுவதிலும் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் பயிர்செய்கை நடவடிக்கைகள், நாட்டின் சகல பகுதிகளையும் உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்தோடு பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் நடைபாதைகளை கட்டமைத்தல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை செய்துகொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளையும் படையினர் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை இராணுவம் நாட்டின் விளையாட்டு துறை மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் வழங்குகிறது. அதற்கமைய ஜப்பான் டோக்கியோவில் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தடவையாக இலங்கை திருநாட்டிற்கு தங்கப்பதக்கத்தை வென்று ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. அதேபோல் கடந்த தெற்காசிய போட்டிகளில் 19 தங்கப்பதங்களும் 29 வெள்ளிப் பதக்கங்களும் 37 வெண்கல பதக்கங்களும் இராணுவ விளையாட்டு வீரர்களால் வெற்றிகொள்ளப்பட்டது. மேற்படி போட்டிகளில் சதவீத அடிப்படையில் அதிகளவிலான பதக்கங்களை வென்ற இராணுவ வீரர்கள் இராணுவத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டை எடுத்துகாட்டுகின்றனர். அதேபோல் அண்மையில் இத்தாலியில் இடம்பெற்ற உலக குழு கிண்ண போட்டிகளில் பங்குபற்றி அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் 6 ஆவது இடத்தை பிடித்துக்கொண்டனர். இவ்வாறான வீரர்களை முன்னுதாரணமாக கொண்டு இராணுவத்தின் ஏனைய விளையாட்டு வீரர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மைதானம், விளையாட்டு அரங்குகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான பயிற்சி போட்டிகள் என்பவற்றை பயன்படுத்து தாய்நாட்டிற்கு அபிமானத்தை தேடித் தருவர் என எதிர்பார்க்கிறோம்.

பல்வேறுப்பட்ட துறைகளிலும் திறன்களை வெளிப்படுத்தி வருகின்ற இராணுவத்தின் கலைஞர்கள் குழு ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்ற இராணுவ கலைப் போட்டிகள் 2021 இல் பங்குபற்றி அந்த போட்டியில் பங்குபற்றிய 14 நாடுகளின் இராணுவ அணிகளுக்கு மத்தியில் சிறந்த திறன்களை வெளிப்படுத்திய அணிக்கான கிராண்ட் பிக்ஸ் விருதுகள் பலவற்றை வெற்றிகொண்டது.

தேசத்தின் முக்கிய பணிகளுக்காக அர்பணிப்புடன் செயற்படும் இராணுவ வீரர்களுக்காகன சேவையை வழங்க இராணுவம் ஒருபோதும் பின்நிற்காது. நாட்டிற்குள் சவாலான நிலைமையொன்று காணப்படுகின்ற போதிலும் படையணிகள், பயிற்சி கல்லூரிகள் என்பவற்றின் உட்கட்டமைப்புக்களை இராணுவத்தின் ஐந்தாண்டு திட்டத்தில் மேம்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் சிப்பாய்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் வைத்திய வசதிகளை மேம்படுத்துவதற்கான மேம்படுத்தும் நோக்கில் கண்டி இராணுவ வைத்தியசாலையின் நிர்மாண பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மத்திய மாகாணத்தை அண்மித்து சேவையாற்றுகின்ற சுமார் 40,000 இராணுவ வீரர்கள் பயனடைவர். மேற்படி இராணுவத்தினரின் குடும்பங்களுக்கும் ஓய்வுபெற்றோருக்கும் இவ்வருட இறுதியில் கண்டி வைத்தியாலை பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்க்கிறோம்.

அதேபோல் சகல இராணுவ வீரர்களுக்கும் தனி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழும் பல இராணுவ வீரர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் இராணுவ வீரர்களுக்கு தனிப்பட்ட வகையில் தனது வீடுகளை நிர்மாணித்து கொள்வதற்கான நிதி வசதிகளை அரச வங்கிகள் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்தான திட்டமிடலும் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

நான் இராணுவ தளபதியாக தெரிவாகியதன் பின்னர் குறுகிய காலத்திற்கு பெருமளவானவர்களுக்கு நிலை உயர்வை பெற்றுக்கொடுக்க முடிந்தது. அத்தோடு 72 ஆவது இராணுவ ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு மேலும் 567 அதிகாரிகள் மற்றும் 10,368 சிப்பாய்களுக்கும் நிலை உயர்வை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளமையையிட்டு மகிழ்ச்சி கொள்கிறேன். அதற்கமைய இலங்கை இராணுவ வரலாற்றில் மிக குறுகிய காலத்திற்குள் 3,851 அதிகாரிகள் மற்றும் 78,707 சிப்பாய்களுக்கும் நிலை உயர்வை பெற்றுக்கொடுக்க முடித்ததையிட்டும் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல் இலங்கை இராணுவ தொண்டர் படைகளின் அதிகாரிகளுக்கு தாமதாகிவந்த நிலை உயர்வுகளின் தாமதத்தை நிவர்த்திக்கும் வகையில் 07 பிரிகேடியர் நிலைகள், 17 கேணல் நிலைகள், 48 லெப்டினட் கேணல் நிலைகளை உருவாக்க முடிந்துள்ளமையும் மற்றுமொரு வெற்றியாகும்.

அத்தோடு எம்முடன் தாய்நாட்டிற்காக போராடி உயிர் தியாகம் செய்த வீரர்கள் மற்றும் நிரந்தரமாக அங்கவீனமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை அக்கறையுடன் கவனித்துகொள்ள வேண்டிய கடமையும் எமக்கு உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. அதற்கான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி உள்ளிட்ட பல வனிதையர்களாலும் மிகவும் சிறப்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தாய் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பிற்காக பெரும் சேவையாற்றி வருகின்ற இலங்கை இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு 72 வது இராணுவ ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வாழ்த்துக்களை கூறிக்கொள்ளும் அதேநேரம் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகவும் வலுவாக எதிர்காலமொன்று கிட்ட வேண்டுமெனவும் பிரார்த்தனை செய்கிறேன். மறு முனையில் தென்சூடான் மாலி ராஜ்ஜியத்தில் ஐநா அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்கான பிரார்த்தனை செய்கின்ற அதேநேர்தில் அவர்கள் ஐநா பிரதிநிதிகளின் பாராட்டுக்களுக்கு பாத்திரமாகியுள்ளனர் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். அதேபோல் இராணுவத்திற்காக சேவையாற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில் இராணுவ வீரர்கள் சகலரும் ஒரு குடும்பத்தின் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் சேவையாற்றியிருந்தனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட சவால்களை வெற்றிக்கொண்டமைக்கு எமது ஒற்றுமைதான் வலுவாக காரணமென நாம் நம்புகிறோம். அதன்படி “ஒற்றுமையே பலம்” என்பதை கொள்கையாக கொண்டு “முடியாவை ஒன்றுமில்லை” என்ற இலக்கை இராணுவம் அடைந்துகொண்டுள்ளது. இராணுவத்தின் இந்த கொள்கை தற்போது இராணுவத்திற்குள் மாத்திரம் மட்டுப்படாமல் முழு நாட்டு மக்கள் மத்தியிலும் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளமையையும் அபிமானத்துடன் கூறுகிறேன். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள கூடிய தயார் நிலையிலிருக்கும் தொழில்சார் சிப்பாய்களான நீங்கள், தற்போது ஆற்றிவரும் சேவையை எதிர்காலத்திலும் தொடர்ச்சியான மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன். அதேபோல் தொழில் செய்யும் தருணத்திலும் பொது வாழ்வில் ஈடுபடும் தருணங்களிலும் இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வண்ணமாக செயற்படுவீர்கள் என நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இறுதியாக , நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பாதுகாவலர்களாகவும் தாய்நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக எழும் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கும் இயலுமையும் சக்தியும் இராணுவ வீரர்களுக்கு கிடைக்க வேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன்.

உங்கள் சகலருக்கும் ஜய ஸ்ரீ மகா போதி பெருமானின் பாதுகாப்பு கிட்ட வேண்டும்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீசீ பீஎஸ்சீ எம்பில் ஜெனரல் ஷவேந்திர சில்லா பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி

2021 ஒக்டோபர் மாதம் 10 திகதி