Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2024 18:26:52 Hours

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் சிவனொளிபாதமலை பக்தர்களுக்கு பாயசம் வழங்கல்

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் பீஎஸ்ஆர் பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினரால் "சீதா கங்குல" பகுதியில் 23 பெப்ரவரி 2024 முதல் 24 பெப்ரவரி 2024 வரை பாயசம் வழங்கினர்.

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் ஏறக்குறைய 10,000 பக்தர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி. இந் நிகழ்வுக்கு 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிதியுதவி அளித்தனர்.