15th July 2024 15:11:14 Hours
19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், படையலகின் படையினர் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தரம் 5 மாணவர்களை தயார்படுத்துவதற்காக 2024 ஜூலை 14 ஆம் திகதி லக்ஷபான ஆரம்ப பாடசாலையில் கணிதக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பிரபல கணித ஆசிரியர் திரு.கித்சிறி லியனகே கருத்தரங்கை நடாத்தினார். நிகழ்ச்சியில் 9 பாடசாலைகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.