28th June 2024 18:29:22 Hours
19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி 26 ஜூன் 2024 அன்று படையணி கேட்போர் கூடத்தில் தொற்றாத நோய்கள் மற்றும் பாலுறவு நோய்த்தொற்றுகள் (STIs) பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
கினிகத்தேன பொது சுகாதார அதிகாரி திரு. யு.பி. ராஜபக்ஷ இந்த அமர்வை நடத்தினார். 57 படையினர் நிகழ்வில் பங்குபற்றி சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தடுப்பு உத்திகள் குறித்து தெளிவு பெற்றனர்.