Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2023 20:23:34 Hours

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 27 வது ஆண்டு நிறைவு

லக்சபான பிரதேசத்தில் சேவையாற்றும் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி 27வது ஆண்டு நிறைவை நவம்பர் 4 - 6 ஆம் திகதிகளில் ஸ்ரீ பாதசமண் தேவாலயத்திலும் முத்துமாரி அம்மன் கோவிலிலும் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.

ஆண்டு நிறைவு நாளில் (6), படையினரால் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்றதுடன் நிகழ்வின் அடையாளமாக வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டது.

திங்கட்கிழமை (6) அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.