26th December 2024 14:38:38 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்சீஎல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 18 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் தலைமையில் 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் சுதுவெல்ல பராக்கிரம மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நன்கொடை நிகழ்வை அம்பாறை மஹா வாபி விகாரையில் 17 டிசம்பர் 2024 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்படி சுதுவெல்ல பராக்கிரம பாடசாலையின் 148 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.
இந்த முயற்சிக்கு லெப்டினன் கேணல் (ஓய்வு) ஆர். விக்ரமசிங்க மற்றும் பல்லாரத்தில் உள்ள இலங்கை அவுஸ்திரேலிய சங்கம் நிதியுதவி வழங்கினர். இதன்போது மாணவர்கள் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.