27th June 2024 00:01:59 Hours
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணியாளர்கள் மற்றும் 'லைகா ஞானம்' அமைப்பு, 18 வது விஜயபாகு காலாட் படையணியுடன் இணைந்து கல்முனை கடற்கரையோரத்தில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர். இந்த கூட்டு முயற்சியில் விஜயபாகு காலாட் படையணியின் 90 இராணுவ வீரர்கள், 35 மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் 'லைகா ஞானம்' அமைப்பின் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.