07th March 2024 15:40:14 Hours
18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் புனானி கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் அமைந்துள்ள படையலகு பயிற்சி பாடசாலையில் தங்களது படையலகு பயிற்சி பாடநெறியினை நிறைவு செய்தனர். பாடநெறி 16 ஜனவரி 2024 இல் ஆரம்பமாகி 4 மார்ச் 2024 அன்று நிறைவடைந்தது. 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
18 வது விஜயபாகு காலாட் படையணியின் 12 அதிகாரிகள் மற்றும் 335 சிப்பாய்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர். பாடத்திட்டத்தின் போது, ஒவ்வொரு பங்கேற்பாளரும் வரைபட ஆய்வு, கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள், உள்ளக பாதுகாப்பு, கட்டப்பட்ட பகுதிகளில் சண்டை, அனர்த்த முகாமைத்துவம், துப்பாக்கிச் சூடு போன்றவற்றில் தங்கள் அறிவைப் புதுப்பித்துக் கொண்டனர்.
பின்வரும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு அவர்களின் சாதனைகளுக்காக சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன:
- சிறந்த மாணவர்: இரண்டாம் லெப்டினன் ஏஎம்ஐ அக்தாப்
- சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்: சார்ஜன் டிஎம்எஸ்எஸ்.திசாநாயக்க
சிறந்த உடற்தகுதி: காலாட் சிப்பாய் டிஎன்எஸ்எல் ஜயசூரிய
- படையலகின் சிறந்த படைக்குழு: ஆதரவு படைக்குழு