Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th July 2021 08:00:42 Hours

18 கெமுனு ஹேவா படையினரால் முதியோர் இல்லத்தில் சமூகப் பணிகள் முன்னெடுப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேட் 18 வது கெமுனு ஹேவா படையினரால் செவ்வாய்க்கிழமை (21) மொனராகலையிலுள்ள உள்ள பிலிசரன முதியோர் இல்லத்தில் சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்டுவோருக்கான மதிய உணவு வழங்கிய படையினர் அதற்கு முன்னதாக இல்ல வளாகம் முழுவதையும் சுத்தம் செய்யதனர்.

12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக, மற்றும் 121 பிரிகேட் தளபதிகளின் வழிகாட்டலின் கீழ் 18 வது கெமுனு ஹேவா படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் இத்திட்டம் இடம்பெற்றது.