22nd December 2024 10:03:33 Hours
புத்தளம் மாவட்டத்தில் வனாத்தவில்லுவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள “நிர்மல மாதா” முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் 18 பேருக்கு ஆதரவளிக்கும் வகையில் நன்கொடை நிகழ்ச்சி 2024 டிசம்பர் 20 அன்று நடைபெற்றது.
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 143 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.ஏ.டி.டீபீ விமலசேன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கஜபா படையணியின் 16 வது கஜபா படையலகின் அதிகாரிகள், சிப்பாய்கள் உட்பட 15 பேர் கொண்ட அர்ப்பணிப்புள்ள குழு, 16 வது கஜபா படையலகின் கட்டளை அதிகாரி மேஜர் டி.எம்.ஏ.யூ திஸாநாயக்க ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் இந்த தொண்டு நிகழ்ச்சியை முன்னெடுத்தது.
இந் நன்கொடை நிகழ்வில் சிரேஷ்ட குடிமக்களின் அன்றாடத் தேவைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், குழு சிரேஷ்ட குடிமக்களுடன் நேரத்தை செலவிட்டதுடன் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கி மற்றும் நட்பு உரையாடல்களில் ஈடுபட்டது.
முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு அத்தியாவசிய ஆதரவையும் பராமரிப்பையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.