Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2024 16:20:22 Hours

16 வது கஜபா படையணி ஏற்பாட்டில் மரம் நடுகை திட்டம்

143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஏடிடிபீ விமலசேன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 16 வது கஜபா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் படையினரால் கற்பிட்டி, ஆமோதட்டம் பகுதி சதுப்புநிலத்தில் மரம் நடும் திட்டத்தை 13 டிசம்பர் 2024 அன்று முன்னெடுத்தனர்.

இம் முயற்சி லீனியா எக்குவா தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. திட்டத்தில், 10,000 மரக்கன்றுகள் சதுப்புநிலத்தில் நடப்பட்டன. ஒரு அதிகாரி மற்றும் முப்பது படையினர் இத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.