06th June 2023 17:30:12 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைபிரிவின் 561 காலாட் பிரிகேட்டின் 16 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் பொசன் பௌர்ணமி தினத்தன்று (ஜூன் 3) வவுனியா கனகராயன்குளத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதற்கமைய படையினர் மிஹிந்தலை மாதிரி பல வண்ண கூடுகளை வைத்து அப்பகுதியை அலங்கரித்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாலை நேரத்தில் அன்னதானத்தை பெற்று கொண்டதுடன் அலங்காரங்களை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 561 வது பிரகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.