Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2023 22:34:48 Hours

16 வது கஜபா படையினரால் புத்தளம் வைத்தியசாலையில் அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 16 வது கஜபா படையணியின் படையினரால் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 31) அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்சியை நடாத்தினர்.

இத் திட்டமானது மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, 143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.எம்.எப் கிட்சிலன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோர்களின் வழிக்காட்டலுக்கமைய 16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் எஸ்.ஏ.டி.பீ ஜயரத்ன, 02 அதிகாரிகள் மற்றும் 20 சிப்பாய்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.

சுனாமி, வெள்ளம், ஏனைய இயற்கை அல்லது மனிதனால் ஏற்படக்கூடிய அனார்தங்களின் போது அவசரகால செயல்பாடுகளை செயல்படுத்துதல், முடிவெடுப்பதன் முக்கியத்துவம், கூட்டுப் பொறுப்புகள், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக ஏற்றுக்கொள்வது என்பன இந்த விழிப்புணர்வூட்டும் திட்டத்தில் மருத்துவமனை ஊழியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.