11th November 2024 14:00:38 Hours
16 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூஎச் விக்கிரமசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய 16 வது இலங்கை சிங்க படையணி வளாகத்தில் 16 வது ஆண்டு நிறைவாண்டை தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் 01 நவம்பர் 2024 அன்று கொண்டாடப்பட்டது.
வருகை தந்த கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து 16 வது இலங்கை சிங்க படையணி படையினரால் படையலகு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர், முகாம் வளாகத்தில் மரக்கன்று நடுதல், படையினருக்கான உரை, குழு படம் எடுத்தல் மற்றும் அனைத்து நிலையினருக்கான மதிய உணவிருந்திலும் கலந்து கொண்டார்.
மேலும், 2024 நவம்பர் 03 ஆம் திகதி ஆண்டு நிறைவை முன்னிட்டு கிரிக்கெட் மற்றும் கரப்பந்து போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரித்து பாராட்டு சின்னம் வழங்கியதுடன் கொண்டாட்டம் நிறைவு பெற்றது.
16 வது இலங்கை சிங்க படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.