Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st July 2021 21:27:42 Hours

154,188 பேர் புத்தாண்டின் பின்னரான கொத்தணியில் அறியப்பட்டுள்ளனர்

இன்று காலை (02) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,883 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 68 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள். ஏனைய 1,815 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமாக 342 பேர் கம்பஹா மாவட்டத்தில் இணங்காணப்படுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 247 தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 220 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 1,006 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என்று கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (02) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 260,971 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 154,188 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.

இன்று (02) காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,888 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர். ஜூன் மாதம் (30) இலங்கைக்குள் 43 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 27 பெண்களும் 16 ஆண்களும் அடங்குவர்.

இன்று (02) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 74 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,394 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (02) காலை 0600 மணி வரையான காலப்பகுதியில் (கடந்த 24 மணி நேரத்தில்) 42 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 1341 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.

இன்று (2) காலை வரையில் இரத்னபுரி மாவட்டத்தில் கிரியெல்ல பொலிஸ் பிரிவின் மட்டுவகல வத்த மேல் பகுதிகள், கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவின் ஹெந்தல (வடக்கு) கிராமசேவகர் பிரிவின் ஓலந்த கிராமம் மற்றும் ரப்பர்வத்த, கொழும்பு மாவட்டத்தின் நுகேகொட பொலிஸ் பிரிவின் ஒபேசேகர கிராமசேவகர் பிரிவின் ஒபேசேகர 514 சி மற்றும் நுவரெலிய மாவட்டத்தின் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவின் கொட்டியகலவத்த கீழ்பகுதி ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை (2), அயோஜன மண்டல வீதி, லேக் வியூ வீதி மற்றும் பியகம பொலிஸ் பிரிவின் யடிஹென கிராம சேவகர் பிரிவில் உள்ள பொல்ஹென வீதி மற்றும் கோவில் வீதி, அரியதாச விதானகே அவென்யூ மற்றும் அதன் பகுதிகள் மற்றும் கம்பாஹா மாவட்டத்தின் சியம்பலாபேவத்த கிராம சேவகர் பிரிவில் உள்ள கதுன்பொட வீதி மற்றும் மாத்தளை மாவட்டத்தின் மகாவெல பொலிஸ் பிரிவின் தெமடஓய E 417/A ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளன.