30th December 2023 20:03:37 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 223 வது காலாட் பிரிகேட் படையினர் 95 கந்தளாய் சகாய மாதா தேவாலயத்துடன் இணைந்து டிசம்பர் 27 அன்று மூதூரில் பல இடங்களில் நத்தார் கரோல் நிகழ்ச்சியை நடாத்தினர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டதுடன், இந்நிகழ்ச்சியில் இந்து, பௌத்த மற்றும் கிறிஸ்தவ பிள்ளைகளின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 223 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
மேலும் 223 வது காலாட் பிரிகேட் படையினர் டிசம்பர் 26 அன்று 223 வது காலாட் பிரிகேடில் மூதூர் புனித என் தேவாலயத்தின் கரோல் பாடும் குழுவினரின் ஒத்துழைப்புடன் நத்தார் கரோல் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.