Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th June 2023 22:21:40 Hours

15 வது ட்ரோன் இலங்கை பீராங்கி படையினரால் ‘விருஅமாதார’ நிகழ்வுக்கு ஆதரவு

வண. உடுதும்பர காஷ்யப்ப தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை பீராங்கி படையணியின் 15 வது ட்ரோன் படையணி வீரர்கள் 2023 ஜூன் 26 அன்று கொஸ்கமவில் ‘ஜய டிவி' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘விருஅமாதார’ நிகழ்ச்சிக்கு தமது பங்களிப்பை வழங்கினர்.

கொஸ்கமவில் உள்ள 'சுவர்ணஜெயந்தி' ரணவிரு கிராமத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன் இந்த ரணவிரு கிராமத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு ஆதரவளிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு முறையே உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை எழுதுபொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 142 வது பிரிகேடின் 15 வது ட்ரோன் இலங்கை பீராங்கி படையணி படையினர் இந்த சமூக நிகழ்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவினர். நிகழ்ச்சிக்கான இடத்தை ஏற்பாடு செய்தல், அதனை தூய்மைபடுத்தல் பரிசுகள் வழங்கல் போன்றவற்றை ஆதரிப்பதில் அவர்கள் தீவிரமாக பங்களித்தனர்.

15 வது ட்ரோன் இலங்கை பீராங்கி படையணி கட்டளை அதிகாரி மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இராணுவத்தின் பங்களிப்பை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.