06th November 2023 08:22:10 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 223 வது காலாட் பிரிகேடின் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால், தம்பலகமுவ பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு இணங்க, ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்து தம்பலகமுவவில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 03) நடைபெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.
பயனாளியான திரு.சித்ரா வேலாயுதம் லிங்கேஸ்வரம் சர்மா அவர்கள் தனது ஊனமுற்ற மகள் மற்றும் குடும்பத்துடன் தம்பலகமுவவில் ஒரு தற்காலிக வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்களது நிலையை தம்பலகமுவ பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரான திருமதி ஜே ஸ்ரீபதி அவர்களினால் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யூ.பீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் குடும்பத்திற்கு வீட்டின் நிர்மாணப்பணியை மேற்கொண்டதுடன், நிலம், நிதியுதவியாக ரூ.1.35 மில்லியன் மற்றும் பொருட்களையும் தம்பலகமுவ பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் 223 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் என்.சி மாரசிங்க மற்றும் படையினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வீட்டுத் திறப்பு விழாவில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சர்வமத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பயனாளிக்கு சாவியை வழங்கினார். இந்நிகழ்வில் மொல்லிப்பொத்தானை சிங்களப் பாடசாலை, பாரதிபுரம் தமிழ்ப் பாடசாலை மற்றும் தம்பலகமுவ ஹிக்மா முஸ்லிம் பாடசாலை மாணவர்களினால் மூவின கலாசார நடனங்கள் அரங்கேற்றப்பட்டன.
அன்றைய நிகழ்வின் நினைவாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி அவர்கள் பயனாளி குடும்பத்தின் இளைய மகளுடன் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார். இறுதியில், திருமதி ஜே ஸ்ரீபதி அவர்கள் இத்திட்டத்திற்கு உதவிய அனைத்து படையினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் தேநீர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்துரையாடியதுடன் நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்தன.
இந்நிகழ்வில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 223 வது காலாட் பிரிகேட் தளபதி, திருகோணமலை மாவட்ட செயலாளர் திரு.சமிந்த ஹெட்டியாராச்சி, தம்பலகமுவ பிரதேச செயலாளர் திருமதி ஜே.ஸ்ரீபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.