Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2023 18:40:47 Hours

144 வது பிரிகேட் படையினரால் முதியோர்களுக்கும் மாணவர்களுக்கும் மதிய உணவு

144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்வி கொடித்துவக்கு அவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது காலாட் பிரிகேட் படையினரால் ராஜகிரிய இரட்சிப்பு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 45 முதியவர்களுக்கும் 30 பிள்ளைகளுக்கும் அண்மையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இத் திட்டமானது 144 வது காலாட் பிரிகேட்டின் ஒருங்கிணைப்பில் றோயல் கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டது. அதே நேரத்தில், அம்பசெவன உணவகத்தின் உரிமையாளர் திரு சுரேஷ் ஜயநாத் அவர்களின் நிதி உதவியுடன் 21 ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரண பொதிகள் வழங்கப்பட்டன. இப் பொதிகள் ஒவ்வொன்றும் ரூ. 1,500.00. பெறுமதி ஆகும்.

மேலும், முதியோர் இல்லத்தில் முதியவர்களை மகிழ்விக்க நடாத்தப்பட்ட இசை நிகழ்வில் 144 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் திரு சுரேஷ் ஜயநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுடன் இணைந்து இந்த சமூக நிகழ்விற்கு ஆசி வழங்கினார்.