Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2023 19:00:56 Hours

144 வது காலாட் பிரிகேட் படையினர் கொதட்டுவவில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது காலாட் பிரிகேடின் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் பொது சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க வியாழக்கிழமை (ஓகஸ்ட் 03) டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக நாடு முழுவதிலும் அனைத்துப் படையினரும் டெங்கு நோய்க்கு எதிரான இந்த தேசிய நடவடிக்கையில் தங்கள் அர்ப்பணிப்பை செலுத்துகின்றனர்.

பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார திணைக்களம், சுகாதார வைத்திய பணிமனை மற்றும் நகர சபை ஊழியர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை கடந்த வாரங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ள கொதட்டுவ சுகாதார வைத்திய பணிமனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இத் திட்டத்தின் போது, அதிகாரிகளுக்கு உதவுவதில் இராணுவ சிப்பாய்கள் முக்கிய பங்கு வகித்ததுடன், குடியிருப்புப் பகுதிகள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை ஆய்வு செய்தல், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அகற்றுதல், டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை நிகழ்வை மேற்கொண்டனர்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோர் இந்த திட்டத்திற்கு தங்கள் வழிகாட்டுதலை வழங்கியதுடன், 144 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியினால் முழுமையாக கண்காணிக்கப்பட்டது.