28th April 2023 19:10:22 Hours
144 வது காலாட் பிரிகேடின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 1 வது பொறியியல் சேவை படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் பத்தரமுல்லை அருப்பிட்டிய ஸ்ரீ சாந்தியோகாஷ்ராமய விகாரையின் 60 அடி நீளமும் 20 அடி உயரமும் கொண்ட பாதுகாப்பு சுவரை புனரமைப்பதற்கு தொழில்நுட்ப மற்றும் மனிதவள உதவியை வழங்கினர். இச்சுவரானது கடும் மழை காரணமாக இடிந்து விழுந்துள்ளமையினால் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.
விகாரை பொறுப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் படையினர் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். கட்டுமானப் பணிகள் 2023 பெப்ரவரி 23 தொடங்கி 2 மாதங்களுக்குள் 24 ஏப்ரல் 2023 அன்று முடிக்கப்பட்டன.
அருப்பிட்டி ஸ்ரீ சாந்தி யோகாஷ்ராமய விகாரையின் பிரதம குருவான வண.மொரோந்துடுவே ராகுல தேரர், 2023 ஏப்ரல் 26 அன்று விகாரை வளாகத்தில் நடைபெற்ற சொற்பொழிவின் போது அனைத்து இராணுவ வீரர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கியதுடன் அவர்களின் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
144 வது காலாட் பிரிகேட் தளபதி, 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள், 144 வது காலாட் பிரிகேடின் சிவில் அலுவலக அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரங்காவல் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.