01st April 2023 19:03:53 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப் பிரிவின் 144 வது காலாட் பிரிகேடின் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் பத்தரமுல்லை பிரதேசத்தில் வியாழன் (30) பிற்பகல் வீசிய கடும் காற்று மற்றும் பலத்த மழை காரணமாக டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் (வீதி) திடீரென விழுந்த மரமொன்றை அகற்றுவதற்கு உதவினர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின்படி 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துடன் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் அப்பகுதி மக்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கினர். இப் பணியினை படையினர் விரைந்து நடாத்தியதுடன் சில மணிநேரங்களில் போக்குவரத்து செயற்பாடுகள் இயல்பான நிலைக்கு மாற்றப்பட்டது.
144 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி ஆகியோர் இப்பணியை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.