07th September 2023 17:31:08 Hours
இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் நிலவும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 143 வது காலாட் பிரிகேட்டினரால் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு காற்று மெத்தைகளின் பற்றாக்குறை நன்கொடையாளர்களின் உதவியுடன் நிவர்த்திசெய்யப்பட்டது.
திரு முகமது ரிஸ்வி, திரு முகமது நௌஷாத், திருமதி ருவானி பண்ணை, திரு நுவன் ரத்நாயக்க மற்றும் திரு சஞ்சீவ சமரசிங்க ஆகியோர் இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த 5 காற்று மெத்தைகளை வாங்குவதற்கான நிதியுதவியினை வழங்கினர்.
143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.எம்.எப் கிச்சிலன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் ஆசியுடன் 16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்எடிபீ ஜயரத்ன யூஎஸ்பீ மற்றும் அவரது படையினரின் ஆதரவுடன் 2023 ஓகஸ்ட் 24 புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு முறைப்படி பணிப்பாளரிடம் கையளித்தனர்.