Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2023 21:15:29 Hours

142 வது காலாட் பிரிகேட் படையினரால் டெங்கு தடுப்பு நடவடிக்கை

சமூகம் சார்ந்த மற்றுமொரு செயற்திட்டமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்கான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் அதேவேளையில், மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 142 வது காலாட் பிரிகேடின் 8 ம் பிரிவின் படையினர் 2023 ஓகஸ்ட் 3 முதல் 5 வரை பிலியந்தலை பிரதேசத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சுகாதார அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம், வேகமாக அதிகரித்து வரும் டெங்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டது. இராணுவ வீரர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார், தீவிரமாக ஒத்துழைத்து, சமூகத்தை பாதுகாப்பதில் தங்கள் ஊக்கத்தை வெளிப்படுத்தினர்.

தூய்மையான சூழலைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து ஆய்வு நடத்துதல், நீர் தேங்கி நிற்கும் பொருட்களை அகற்றுதல் ஆகியவற்றை மேற்கொண்டனர்.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் ஆசீர்வாதத்துடன், 142 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 8 ம் பிரிவின் தளபதி ஆகியோரின் தீவிர கண்காணிப்பின் கீழ் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.