07th June 2024 13:20:39 Hours
எகொடகம மற்றும் புவக்பிட்டிய பிரதேசத்தில் விழுந்த மரங்களை அகற்றும் நடவடிக்கையை 142 வது காலாட் பிரிகேட் படையினர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இப்பணியானது 142 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 02 அதிகாரிகள் மற்றும் 20 படையினரின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டன. இவர்களின் துரித நடவடிக்கை மற்றும் திறமையால் சீரற்ற காலநிலையால் வீழ்ந்த மரம் மற்றும் குப்பைகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
அத்துடன் எகொடகம, புவக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஒரு குடும்பத்திற்கு இராணுவத்தினர் நிவாரணம் வழங்கியதுடன், அவர்களின் வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த படையினர் உடனடி உதவிகளை வழங்கினர்.